ஏழை காதலன், பணக்கார காதலி... இதற்கு பிறகும் கதை என்னவாக இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா..? செருப்பு கடை முதலாளி போல் உள்ள வினோ வெங்கடேஷ், தொழிலாளி வேடத்துக்கு இன்னும் உழைத்திருக்கலாம். உருகி உருகி காதலுக்கும் திவ்யா, கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.
சுத்தமான தமிழில் வசனம் பேசும் மன்சூர் அலிகானின் நடிப்பில் வித்தியாசத்தை பார்க்க முடிகிறது. எஸ்.எஸ்.குமரன் இசையில் முருகன் மந்திரம் எழுதியுள்ள பாடல்கள் ஓகே. முதல் பாதியை மிதமான வேகத்தில் சொல்லும் இயக்குநர் வியாசன், பின் பாதியை ஆக்ஷன் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.