இந்தப் பக்கத்தை பார்த்ததுமே, ‘என்ன ரோமத்துக்கு இந்த இரண்டு பக்கங்களை வீணாக்க வேண்டும்...’ என்று நீங்கள் பல்லைக் கடிக்கலாம். ஆனால், ‘மெசேஜ்’ இல்லாமல் எந்தப் பக்கமும் முடிவதில்லை என்பதை தயவுசெய்து நீங்கள் உணர வேண்டும்.
இப்போது கூட பாருங்கள், சொட்டச் சொட்ட குளித்துவிட்டு துவட்டிக் கொள்ள துண்டு கிடைக்காததால் உடன் இருக்கும் நடிகையிடம் ஒன்றி தனது குளிரை போக்கிக் கொள்கிறாரே... அந்த நடிகரை குறித்தா நாம் சொல்லப் போகிறோம்? நெவர். காரணம், தெலுங்கு நடிகரும், ‘நம்ம’ ரஜினியின் நண்பருமான மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ்தான் அவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தானே?
பதிலாக, ‘பாவம்’ பார்த்து, தாயுள்ளத்துடன் தன்னையே சூரியனாக்கி நடிகரின் உடம்பிலிருந்து வழியும் நீரை காய வைக்கிறாரே ஸ்நேகா உல்லால்... இவரைக் குறித்துதான் நாம் பேசப் போகிறோம்.
ஐஸ்வர்யாராயின் சாயலில் இருப்பதாலேயே சல்மான் கானால் திரையுலகுக்கு அழைத்து வரப்பட்ட ஸ்நேகா உல்லால்தான் விஷால் - த்ரிஷா நடிக்கும் ‘சமரன்’ படத்தின் இரண்டாவது கதாநாயகியாம். இதை சொல்லத்தான் இந்த இரண்டு பக்கங்கள்.