தினை காரப் பணியாரம்



தேவையான பொருட்கள்

தினை அரிசி - 500 கிராம், உளுந்து - 250 கிராம், வெந்தயம் - 3 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 250 கிராம், மிளகாய் - 4, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, சீரகம் - சிறிதளவு.

செய்முறை

தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும். கடலைத் துவையல், புதினா துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.