சாமை மாம்பழ கேசரிதேவையான பொருட்கள்

சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு, நெய் -50 கிராம்.

செய்முறை

ஒரு கிண்ணம் சாமை அரிசியுடன் 3 கிண்ணம் நீர் சேர்த்து 2விசில் வரும் வரை வேகவிடவும்.அதன் பின்பு வெல்லம், கருப்பட்டி பாகு எடுத்து சேர்த்து நன்கு கிளறி விடவும். இடையில் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பின்பு பாதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். நன்கு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து  சேர்க்கவும். அதன் பின்பு மீதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.