கம்பு வெஜ் ரோல்
தேவையான பொருட்கள்
கம்பு மாவு ஒரு கப். விரும்பிய காய்கறிக் கலவை ஒரு கப். சீஸ் அரைக் கப், மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, பட்டைத்தூள் அரை டீஸ்பூன். துருவிய இஞ்சி 2 ஸ்பூன். பொரிப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு, நறுக்கிய கருவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு தேவைக்கு ஏற்ப வறுத்த சேமியா அரை கப்.
செய்முறை
கம்புமாவை வெறும் கடாயில் சுமார் மூன்று நிமிடம் அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகள், மசாலாப் பொடிகள், உப்பு, கருவேப்பிலை, கொத்துமல்லி, அனைத்தையும் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவின் பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடு படுத்தி, பிசைந்து வைத்த மாவுகளை கோல் வடிவில் உருட்டி அதன் நடுவில் சீஸ் வைத்து நன்கு ரோல் செய்து சேமியாவில் புரட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான மணமான கண்ணைக் கவரும் கம்பு வெஜ்ரோல் ரெடி.
|