குதிரைவாலி தயிர் சோறு



தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி - 500 கிராம், பால் -ஒரு கோப்பை, தயிர் -அரை கோப்பை, உப்பு -தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு -1 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மாதுளை, இஞ்சி - சிறிதளவு.

செய்முறை

குதிரைவாலி அரிசியை சுத்தம் செய்து மூன்று கோப்பை நீர் சேர்த்து, நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். பின் சோறு குளிர்ந்த பிறகு, அதனுடன் பால் சேர்த்து கிளறவும். பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு. காய்ந்த மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும். பின் அதை தயிருடன் சேர்த்து, பால் ஊற்றி சாதத்தில் போட்டு நன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லி, மாதுளை சேர்த்துப் பரிமாறவும். மிகவும் ருசியாக இருக்கும்.