முளைகட்டிய பயறு காய் சாலட்தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு - 50 கிராம், கேரட், வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

முளைகட்டிய பயிறை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் நன்றாக வடித்து அதை ஹாட் பேக்கிலோ அல்லது துணியில் கட்டியோ ஒரு நாள் வைக்கவும். மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும். கேரட், வெள்ளரிக்காய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பயறுடன் சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து இதனுடன் சேர்க்கவும்.