குறுவை அரிசிப் பாயசம்தேவையான பொருட்கள்

குறுவை அரிசி - அரை ஆழாக்கு, பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1/2 ஆழாக்கு, ஏலக்காய், நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 10, திராட்சை -10.

செய்முறை

குறுவை அரிசியை சுமார் அரை மணிநேரம் ஊறவைக்கவும். அதனை தண்ணீர் வடித்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து குக்கரில் அரை லிட்டர் பாலை ஊற்றி பால் பொங்கியவுடன் அரிசியை சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி, மிச்சப்பாலை சர்க்கரையுடன் சேர்த்து கிளறவும் நெய்யில் முந்திரி திராட்சை பொரித்துப் போட்டு ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் அருமையான குறுவை அரிசிப் பாயசம் ரெடி.