கவுனி அரிசி இனிப்பு சாதம்தேவையான பொருட்கள்

கவுனி அரிசி - 1 ஆழாக்கு, சர்க்கரை - 1/2 ஆழாக்கு, துருவிய தேங்காய் - 1/2 கப், நெய் - 1 ஸ்பூன், ஏலக்காய் - 2  பொடித்தது.

செய்முறை

கவுனி அரிசியை சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரில் 1 விசில் வரும்வரை வேகவைக்கவும். அதன்பின்பு வெளியில் எடுத்து நன்கு மசிக்கவும். பிறகு சீனி, துருவிய தேங்காய், நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.