வரகு பெசரெட்தேவையான பொருட்கள்

சிறுபயறு - 100 கிராம், வரகு -50 கிராம், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று. அலங்கரிக்க : வதக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உள்ளே வைக்க, ரவா உப்புமா.

செய்முறை

பயறு, வரகு இரண்டையும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பின்பு சிறிது உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் மெல்லியதாக வார்த்து அதனை சுற்றி வதக்கிய வெங்காயம், மல்லித் தழை தூவவும்.வெந்ததும் நடுவில் ரவா உப்புமா வைத்து மடித்து மெதுவாக திருப்பி வேகவைக்கவும். இதோ சுவையான, ஆரோக்கியம் நிறைந்த வரகு பெசரெட் தயாராகிவிட்டது.