நோயை எதிர்த்து ஆரோக்கியம் காக்கலாம்!அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் விட்டமின்களை கொண்டது. பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை சிறுதானியங்களை நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு சிறுதானியமும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டது.

நம் முன்னோர்கள் “உணவே மருந்து” என்று உண்ணும் உணவிலேயே சத்துக்களையும் பெற்றனர். இன்று பரவி வரும் பல நோய்களை எதிர்த்து நம் உடலில் வலுவை சேர்த்துக் கொள்வது அவசியமாக உள்ளது என்கிறார் சமையல் கலைஞர் சூர்யா.

சிறுதானியத்தை அடிப்படையாக கொண்டு 5 நூல்கள் எழுதி இருக்கும் சூர்யா, யோகா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சிறுதானியம், யோகா ஆகிய இரண்டையும் அடிப்படையாக கொண்டு பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வரும் இவர் நம்முடைய ஆரோக்கியம் காக்கும் சிறுதானிய உணவுகளை தோழியருக்காக வழங்கியுள்ளார்.

தொகுப்பு: ப்ரியா