ப்ரியங்களுடன்...



*காற்று மாசுக்கு பசுமை தீர்வு தரும் தோழிகளின் சேவை வரவேற்கத்தக்கது. அவர்களது ‘இன்ப்ளூம்ஸ்’ நர்சரி சிறக்க வாழ்த்துகிறோம்.
- பிரபாலிங்கேஷ், கன்னியாகுமரி.

*பலருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளுடன் வாழும் உமா அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மனிதநேயம் உடைய இவர்களை நாமும் பின்பற்ற வேண்டும்.
- நா.சைமன், விநாயகபுரம்.

*புத்தகம், நூலகம் பற்றி பெரிய தலைவர்கள் எழுதியதை படித்தபோது, நாமும் அவர்களை பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சிறைச்சாலைகளுக்கு புத்தகம் அன்பளிப்பாக கொடுத்தால் அவர்கள் திருந்த வாய்ப்புண்டு.
- எம்.ஏஞ்சலின், சென்னை.

*“பிரேக்ஸ் உமன்” பற்றிய செய்தியை படித்தேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பெண் நினைத்தால் ஆண்களுக்கு நிகராக எதை செய்யலாம் என்பதை சிவஜோதி அவர்கள் நிரூபித்து காட்டிவிட்டார்கள். வாழ்த்துகள்.
- எஸ்.பிரீத்தி, செங்கல்பட்டு.

*படிப்படியாக, பக்குவமாக, மக்களின் மனதிற்குப் பிடித்த மாதிரியாக வெற்றி பெறும் காவ்யா, சஞ்சய்க்கு வாழ்த்துகள்.
- வே.தேவஜோதி, மதுரை.

*யானைகளை குழந்தைகளாக பாவித்து பாசம் காட்டி வளர்க்கும் பழங்குடி தம்பதியர்களை… அவர்களது ஆழமான உணர்வுகளை படம்பிடித்துக் காட்டிய ஆவணப்படம் பற்றிய கட்டுரை சூப்பர்.
- த. சத்தியநாராயணன், சென்னை.

*கல்லீரல் ஏன் முக்கியமாக கருதப்படுகிறது. அது பாதிப்படைந்தால் என்னாகும்? அதற்கான தீர்வுகள், தடுக்கும் வழிகள் பற்றி இயன்முறை மருத்துவர் கோமதி இசைக்கர் விளக்கமாக தெரிவித்தார்கள்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

*9 வகையான சாலட் உணவுகள் இயற்கை உணவுப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்திருந்த அதே சமயம், சாலட் உணவுகளின் அருமை பெருமைகளை அனைவருக்கும் உணர்த்தியிருந்த பயனுள்ள தகவல்கள்.
- என்.கலைச்செல்வி வளையாபதி, கரூர்.

*‘தாங்க்யூ’ என்ற மழலைச் சொல் கேட்பதற்காகவே தனது பேத்தியை (ஹஸ்மிதா) எட்டாத சுவர் எட்ட, தனது தோள் மீது வைத்து படம் வரைய உற்சாகமூட்டியது நாம் மிக சந்தோஷப்பட
வேண்டியதாக உள்ளது.
- டி.சாந்தி நடராஜன், நாகர்கோவில்.

அட்டைப்படம்:  கீர்த்தி சுரேஷ்