பாயசம் பலவிதம்அவரை பருப்பு பாயசம்

என்னென்ன தேவை?

அரிசி - 1 கப்,
அவரை பருப்பு - 1/2 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - 1 கப்,
ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை, நெய் - தேவைக்கு,
உப்பு - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 10 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அரிசியை போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் அவரை பருப்பு, தேங்காய்த்துண்டுகள், வெல்லப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், நெய் 2 டீஸ்பூன், உப்பு கலந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

அவரை பருப்பு பாயசம்

என்னென்ன தேவை?

அரிசி - 1 கப்,
அவரை பருப்பு - 1/2 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - 1 கப்,
ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை, நெய் - தேவைக்கு,
உப்பு - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 10 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அரிசியை போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் அவரை பருப்பு, தேங்காய்த்துண்டுகள், வெல்லப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், நெய் 2 டீஸ்பூன், உப்பு கலந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

தினை அரிசி பாயசம்

என்னென்ன தேவை?

தினை அரிசி - 1 கப்,
வெல்லப்பொடி - 1½ கப்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
முந்திரி, திராட்சை,
நெய் - தேவைக்கு,
உப்பு - ஒரு சிட்டிகை,
ஏலக்காய் - 4.

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், தினை அரிசியை சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கி வெல்லப்பொடி, தேங்காய்ப்பால், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, உப்பு கலந்து ஏலப்பொடி தூவி பரிமாறவும்.

சேமியா பாயசம்

என்னென்ன தேவை?

சேமியா - 100 கிராம்,
ஜவ்வரிசி - 50 கிராம்,
காய்ச்சிய பால் - 1 டம்ளர்,
சர்க்கரை - 1/4 கிலோ,
உப்பு - ஒரு சிட்டிகை,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
நெய், முந்திரி, திராட்சை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை வறுத்து தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் சேமியாவை சேர்க்கவும். சேமியா  வெந்ததும் இறக்கி சர்க்கரை, காய்ச்சிய பால், உப்பு, ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை கலந்து பரிமாறவும். தேவையானால் கடலைப்பருப்பை வேகவைத்தும் சேர்க்கலாம்.

கொள்ளு பாயசம்

என்னென்ன தேவை?

அரிசி - 1 கப்,
வறுத்து உடைத்த கொள்ளு - 1/2 கப்,
வெல்லத்தூள் - 1½ கப்,
தேங்காய்த்துருவல் - 1½ கப்,
சுக்குத்தூள், சோம்பு தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?
அரிசியை ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து கொள்ளு சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் அரிசியை சேர்க்கவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி வெல்லப்பொடி, தேங்காய்த்துருவல், சுக்குத்தூள், சோம்புத்தூள், உப்பு கலந்து சூடாக பரிமாறவும்.

பயத்தம்பருப்பு பாயசம்

என்னென்ன தேவை?

பயத்தம்பருப்பு - 1 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய், முந்திரி, திராட்சை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பயத்தம்பருப்பை லேசாக வறுத்து, அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, பயத்தம்பருப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி வெல்லப்பொடி, தேங்காய்ப்பால், ஏலப்பொடி, உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.

- சு.கண்ணகி,  மிட்டூர்.