வைரல் சம்பவம்



புது வருடத் தொடக்க நாளிலிருந்து தாய்லாந்தில் சில கடைகள் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்துள்ளன. மக்களே பிளாஸ்டிக் அல்லாத பைகளைக் கொண்டு வந்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். திடீரென்ற பிளாஸ்டிக் பை தடையால் மளிகைக் கடைக்குப் பொருட்களை வாங்கப்போகும் தாய்லாந்துவாசிகள் விழி பிதுங்கிப் போயிருக்கின்றனர்.

அதே நேரத்தில் தாய்லாந்து இளசுகள் குவளை, துணி வைக்கும் ஸடேண்ட், ஒற்றை சக்கர வண்டி என விதவிதமான பொருட்களை எடுத்துவந்து மளிகைக் கடைகளில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இன்னும் சிலர் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக கிரியேட்டிவ்வாக சில பைகளைச் செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.