மார்பிள் குகைகள்



எறும்பு ஊர்ந்து ஊர்ந்து பாதை உருவானால் எப்படியிருக்கும? அப்படியான ஒரு சம்பவம்தான் இது. தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஏரி கரேரா. அதிகபட்சமாக 586 மீட்டர் ஆழமுள்ள இந்த ஏரி சிலி நாட்டில் வீற்றிருக்கிறது.
ஏரிக்குள் இருக்கும் அழகான மார்பிள் குன்றுதான் இதன் ஸ்பெஷல். சில ஆயிரம் ஆண்டுகளாக அந்தக் குன்றின் மீது தண்ணீர் பாய்ந்து அதில் அழகழகான மார்பிள் குகைகள் உருவாகியுள்ளன. மார்பிள் குகைகளைத் தரிசிக்க படகில் மட்டுமே செல்ல முடியும். உலகின் முக்கிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மார்பிள் குகைகளும் இடம்பிடித்துவிட்டன.