2020-ன் முதல் ஸ்மார்ட்போன்



புது வருடத்தில் தனது முதல் ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் இறக்கியிருக்கிறது ‘விவோ’ நிறுவனம். கடந்த வருடத்தில் கணிசமான வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்துவிட்ட ‘விவோ’வின் புது மாடலின் பெயர் ‘எஸ் 1 ப்ரோ’.  இதன் ஹார்டுவேரில் ஆச்சர்யமான பல விஷயங்களையும் மாற்றங்களையும் செய்திருப்பதாகச் சொல்கின்றனர் கேட்ஜெட்ஸ் விமர்சகர்கள்.

மெலிதான வடிவமைப்பில் மின்னுகிறது இந்த போன். ஃபுல் ஹெச் டி மற்றும் ஹை ரெசல்யூசனில் 6.38 இன்ச்சில் சூப்பர் AMOLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 665 SoC சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், ஹெச்.டி.ஆர், போட்ரியாட் என பல மோட்களில் புகைப்படமெடுக்க 48 எம்பியில் முதன்மையான பின்புற கேமரா, வைடு ஆங்கிள் ஷாட்களுக்குத் தனியாக 8 எம்பியில் ஒரு கேமரா, மேக்ரோ பதிவுகளுக்கு 2 எம்பியில் இரண்டு கேமராக்கள் என குவாட்- கேமரா செட் அப்பில் நான்கு பின்புற கேமராக்கள், முன் பக்கத்தில் செல்ஃபிக்கு 32 எம்பியில் ஒரு கேமரா, கேம்ஸ் விளையாடுபவர்களை மனதில் வைத்து அதிக நேரம் சார்ஜ் நிறக 4500 mAh பேட்டரி திறன், வைரத்தின் வடிவில் உள்ள பின்புற கேமராக்களின் வடிவமைப்பு தான் இந்தப் போனுடைய முக்கிய அம்சங்கள்.

மிஸ்டிக் பிளாக், ஜேஸி ப்ளூ, ட்ரீமி வைட் என மூன்று வண்ணங்களில் அசத்துகிறது இந்த போன். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கிடைக்கும் இதன் விலை ரூ.19,990.