நெருப்புக்கோழி புராணம்



நெருப்புக்கோழியில் 3 இனங்கள் உள்ளன. ஏழு அடி முதல் எட்டு அடி உயரம் வரை சராசரியாக வளரும். சுமார் 130 கிலோ எடை வரை இருக்கும். சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நெருப்புக்கோழியின் எலும்பு படிவங்கள் இப்போது கிடைத்துள்ளன.
பெண் நெருப் புக்கோழிகள் பழுப்பு நிறத்திலும், ஆண் நெருப்புக்கோழிகள் கறுப்பு நிறத்திலும் காணப்படும். கால்களில் இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கும். மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு குடுகுடுவென்று ஓட முடியும். மனிதரைக்கூடச் சுமந்துகொண்டு ஓடும் அளவுக்கு ஆற்றல்மிக்கது.

ஆனால், பறக்கத் தெரியாது. பழங்கள், கொட் டைகள், பூச்சிகள், சிறிய ஊர்வன வற்றை மிகவும் விரும்பிச் சாப்பிடும். வால் பகுதியை
ஆட்டியும், தலையை அசைத்தும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. உலகி லேயே மிகப்பெரிதாக முட்டை இடும் கோழிகள் நெருப்புக்கோழிகள்தான். இதன் ஒரு முட்டை 2 டஜன் கோழி முட்டைகளுக்குச் சமம்.

முட்டையிலிருந்து  40 முதல் 42 நாட்களில் குஞ்சுகள் வெளி வரும். உலகமெங்கும்  20 லட்சம் நெருப்புக்கோழிகள் உயிர்வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளன. நெருப்புக்கோழிக்கு மோப்ப சக்தி அதிகம். இதன் முட்டையை யாராவது தொட்டிருந்தால்கூட மோப்ப சக்தியின் மூலம் கண்டுபிடித்து விடும்.

பின்னர் கோபத்தில் அந்த முட்டையை உடைத்து விடுமாம். அதேபோன்று இதற்கு பார்வைத் திறனும் அதிகம். ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையும் கூட இதனால் பார்க்க முடியும். நெருப்புக்கோழி உப்பை மிட்டாய் போல உண்ணக் கூடியது.

இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. விலங்கியல் பெயர் ஸ்ட்ருதியோ கேமெலஸ் (Struthio camelus). கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சஹாரா பகுதிகளில் உள்ள வறண்ட புல்வெளிகளில் இவை வசிக்கும். இவற்றின் சிறகுகள் தொப்பிகள் செய்யவும், தோல் அலங்காரப் பொருட்கள் செய்யவும், இறைச்சி உணவாகவும் பயன்படுகிறது. குதிரைகளுக்குப் பூட்டுவது போல சேணங்கள், கடிவாளத்தை நெருப்புக்கோழிகளுக்குப் பூட்டி வண்டிகளை இழுக்கச் செய்வது மேலை நாடு களில் சகஜம். நெருப்புக்கோழி களுக்கான ஓட்டப் பந்தயமும் பிரபலமானது.

க. கதிரவன்