வைரல் சம்பவம்இணையத்தில் அவ்வப்போது விநோதமான சம்பவங்கள் அரங்கேறி மக்களை சில நிமிடங்களாவது ரிலாக்ஸாக வைக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் இது. பெயர், இடம் குறிப்பிடப் படாத ஒரு சாலை.
அந்தச் சாலையில் மூன்று பேர் இரு சக்கரத்தில் ஹாயாக சென்று கொண்டிருக்கின்றனர். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த மூவரில் ஒருவர் நாய். அந்த நாய்தான் வாகனத்தை ஓட்டுகிறது என்பது இதில் ஹைலைட். இந்த சாகச பயணம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிட் அடித்துவிட்டது.