பினோச்சியோ



இத்தாலிய எழுத்தாளர் கார்லோ கொலோடி எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘த அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பினோச்சியோ’. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் பினோச்சியோ. பொய் சொல்லச் சொல்ல அந்தக் கதாபாத்திரத்தின் மூக்கு வளர்ந்துகொண்டே போகும். இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைப் படங்களும் வந்திருக்கின்றன.

இப்போது தென் கொரியாவைச் சேர்ந்த  கிம் போங்சூ என்ற சிறபக்கலைஞர் பினோச்சியோவை ராட்சத சிற்பமாகச் செதுக்கி காட்சிக்கு வைத்து அப்ளாஸை அள்ளி வருகிறார். இந்தச் சிற்பம் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.