கதைசொல்லிஇந்தியா முழுவதும் சைக்கி ளில் பயணம் செய்து அசத்தி யுள்ளார் குமார் ஷா. அதுவும் குழந்தைகளிடம் கதை சொல் வதற்காக. ‘‘எதுவுமே முதல் அடி எடுத்து வைக்கிறதுதான் கஷ்டம். எடுத்து வச்சுட்டா எவ்வளவு தொலைவா இருந்தாலும் நம்மால் சுலபமா கடந்து விட முடியும். அதுக்கு எப்போதுமே இயற்கை துணையா இருக்கும். இதுதான் என்னோட நம்பிக்கை.

இந்த நம்பிக்கையிலதான்  பொள்ளாச்சி ஆழியாரில் இருந்து சைக்கிள்ல கிளம்பினேன். கொஞ்சம் துணியையும், கையில ரெண்டாயிரம் ரூபாயையும் எடுத்து வச்சுக்கிட்டேன். அந்தப் பணமும் நண்பர் கொடுத்தது. இதை வச்சுக்கிட்டு இந்தியா முழுவதும் சுத்தினேன்...’’ மெலிதாக சிரித்துக்கொண்டே பேசுகிற குமார் ஷா தினமும் குறைந்தபட்சம் 200 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டியிருக்கிறார்.

‘‘நிலப்பரப்புகளை நாம தமிழ்நாடு, கேரளானு பார்க்குறோம். ஆயிரம்  வருசத்துக்கு முன்னாடி அதையே  சேரநாடு, சோழநாடுனு பார்த்தோம். ஆனா, எந்த ஒரு நிலப்பரப்பும் தனக்கான எல்லைகளை, வரைகோடுகளை போட்டதே கிடையாது. நாம தான் அதுக்கு போட்டுக்கிட்டோம். நிலப்பரப்பு நிலப்பரப்பாதான் ஆதியிலிருந்து இருக்கு. அதுக்குள்ள எவ்வளவோ கதைகள் நடந்து முடிந்து, இன்னமும் நடந்துகிட்டு இருக்கு.

அதுல புனைவும் இருக்கு, உண்மையும் இருக்கு. அந்தக் கதை பொய், இந்தக் கதை உண்மைன்னு பார்க்குறத விட கதையில இருக்குற அழகைத்தான் பார்க்கிறேன். இப்படி ஒவ்வொரு நிலப்பரப்புக்குள்ளயும் போனபோது அங்க வாழ்ற மக்கள்கிட்ட கதைகளைக் கேட்டேன். அந்த இடத்துல இருக்குற கொழந்தைகள்கிட்ட அக்கதைகளைச் சொன்னேன்.

கதைகளைக் கேட்பதும், கேட்ட கதைகளைச் சொல்வதும் இனம்புரியாத மகிழ்ச்சியைத் தந்தது...’’ என்றவர் குழந்தைகளிடம் கதை சொல்லும்போது தனக்குக் கிடைத்த அனுபவங் களைப் பகிர்ந்து கொண்டார். ‘‘கொழந்தைகள் கிட்ட  நீங்க  எந்தக் கதையை வேண்டு மானாலும் சொல்லலாம். நீங்க சொல்வது கதையா இல்லாவிட்டாலும் அவங்க காது கொடுத்து ஆர்வமா கேட்பாங்க.

நீங்க கொழந்தை களிடம் கதையைச் சொல்லச் சொல்ல உங்களுக்குள்ள புதுசா ஒரு கதைசொல்லி உருவாகிறான். உண்மையில் நீங்க சொல்றதை எல்லாம் பொறுமையா கேட்பதின் மூலமா ஒரு தேர்ந்த கதை சொல்லியா கொழந்தைகள் உங்களை மாத்தறாங்க...’’ என்றார் அவர்.