108 எம்பி கேமரா போன்முதல் முறையாக போனில் கேமரா வந்தபோது என்ன மாதிரியான அதிர்வலைகள் உண்டானதோ அதே மாதிரி யான ஒரு சம்பவத்துக்குத் தயாராக இருங்கள். ஆம்; உலகிலேயே முதல் முதலாக  108 எம்பி திறன் கொண்ட கேமராவுடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தவிருக்கிறது ‘ஷியோமி’. இவ்வளவு திறன் வாய்ந்த கேம ராவை உள்ளடக்கிய போனின் மாடல் பெயர் ‘மீ நோட் 10’.

இது வெறும் வதந்தி என்று பலர் நிராகரித்தாலும் டிஜிட்டல் வாடிக்கையாளர்களும், கேட்ஜெட்ஸ் விமர்சகர்களும் இந்த போன் கண்டிப்பாக வெளி
வரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக ‘மீ நோட் 10’ மாடலில் என்னென்ன அம்சங்கள் இருக்குமென்று தோராயமாக சில தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன. இதுதான் போனில் இருக்கும் என்று உறுதியாக  சொல்ல முடியாது. இருந்தாலும் அந்த அம்சங்கள் என்னவென்பதை பார்த்துவிடலாம்.

குறைந்த எடையில் ஸ்லிம்மான வடிவமைப்பு. 6.47 இன்ச்சில் மெகா டிஸ்பிளே. திரையில் துல்லியத்துக்கு 1080 X 2340 பிக்ஸல் ரெசல்யூசன், 6 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 108 எம்பி முதன்மை கேமரா, இதனுடன் 20 எம்பியில் இரண்டாவதாக ஒரு கேமரா, 12 எம்பியில் மூன்றாவது கேமரா என பின்புற கேமராக்கள் அசத்துகின்றன. இதுபோக 32 எம்பியில் செல்ஃபி கேமரா, 36 மணி நேரத்துக்கு தொடர்ந்து சார்ஜ் நிற்க 5170mAh பேட்டரி திறன் என கெத்து காட்டுகிறது மீ நோட் 10. விலை மற்றும் வெளியாகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.