லித்தியம்



இந்த வருடத்தின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வேதியியல் விஞ்ஞானிகளான ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஷஹாம் மற்றும் அகிரா யோஷினோவுக்கு வழங்கப்படவுள்ளது. லித்தியம் பேட்டரி மற்றும் அதன் வளர்ச்சி குறித்தான ஆய்வுகளுக்காகத் தான் இந்த நோபல் அங்கீகாரம்.

ஸ்மார்ட்போன், லேப்டாப்  உள்ளிட்ட நவீன   எலெக்ட்ரிக் சாதனங்களின் பேட்டரிகளில் உள்ள முக்கிய மூலப்பொருள்லித்தியம் தான்.  மிக அரிதாகவே கிடைக்கும் ஒரு கனிமம் லித்தியம்.

நீரைவிட எடை குறைந்தது. இதைவிட மிக லேசான உலோகம் எதுவும் இல்லை. வெள்ளியைப் போல பளபளக்கும் லித்தியத்தின் தேவை இந்தியாவில் அதிகம். ஆனால், லித்தியம் இங்கே அதிகம் கிடைப்பதில்லை. அதனால் வெளிநாட்டில் உள்ள சுரங்கங்களில் லித்தியத்தைத் தேடிவருகிறது இந்தியா.