மணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் கார்!



இதோ வந்துவிட்டது உலகின் வேகமான கார். மணிக்கு 500 மைல் வேகத்தில் பறக்கிறது இந்த கார். பிளட்ஹவுண்ட் லேண்ட் ஸ்பீட் ரெக்கார்டு குழு இந்தக் காரை வடிவமைத்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் காரை ஓட்டி சோதனை செய்திருக்கிறார்கள். ஜெட் விமானத்தின் என்ஜின் மற்றும் அலுமினிய சக்கரங்களை இதற்காக பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

அடுத்த வருடம் தார் சாலையில் ஓட்டி பரிசோதிக்கவிருக்கும் இந்த காரைப் பார்க்க குட்டி விமானத்தைப் போலிருக்கிறது. வெறும் 8 நொடிகளிலேயே 200 மைல் வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்தக் கார்தான் நிலத்தின் மீது அதிவேகத்தில் பயணிக்கப்போகும் வாகனமாக இருக்கப்போகிறது.