வைரல் சம்பவம்



நியூயார்க்கைச் சேர்ந்த மேக்ஸ்வெல்லும் ஃபின்னிகனும் இணை பிரியாத நண்பர்கள். இருவருக்கும் வயது இரண்டுதான். ஒரே இசைப் பள்ளியில் படித்து வருகின்றனர். ஒரு நாள் மேக்ஸ்வெல் கையை விரித்துக்கொண்டு ஓடி வர, எதிர்முனையில் ஃபின்னிகனும் அதே மாதிரி கையை விரித்துக்கொண்டு ஓடி வந்தான்.

அப்படி ஓடி வந்த இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர். இந்த அழகான காட்சியை மேக்ஸ்வெல்லின் தந்தை வீடியோவாக்கி இணையத்தில் தட்டிவிட, நெகிழ்ச்சியில் ஹார்ட்டின்களை அள்ளி வீசுகின்றனர் நெட்டிசன்கள்.