பெஸ்ட் டிசைன் போன்



இந்தியாவில் தனக்கென ஓர் இடத்தைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட ஸ்மார்ட்போன் நிறுவனம் ‘ஓப்போ’. இப் போது  உலகளவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்துகிறது இந்த சீன நிறுவனம்.
மற்ற நிறுவனங் களின் தயாரிப்புகளோடு ஒப் பிடும்போது இதன் டிசைன் பெரிதளவில் வாடிக்கையாளர் களைக் கவர்ந்திழுக்கிறது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ‘ரெனோ 2’ என்ற மாடலை புதிதாகக் களமிறக்கி யிருக்கிறது ஓப்போ. இந்த வருடத்தின் பெஸ்ட் டிசைன் போன் இதுதான் என்று வாடிக்கையாளர்களும், கேட்ஜெட்ஸ் விமர்சகர் களும் இதைக் கொண்டாடுகின்ற னர். அப்படி அதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

அழகான வடிவமைப்பில் 6.55 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே, 1080 X 2400 பிக்ஸல் ரெசல்யூசன், Android 9.0 Pie இயங்குதளம், 8 ஜிபி ரேம், ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்கவும், விரைவில் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகவும் 4000mAh பேட்டரி திறன், 48 எம்பியில் பிரைமரி கேமரா, 13 எம்பியில் ஒரு கேமரா, 8 எம்பியில் இன்னொரு கேமரா, கடைசியாக 2 எம்பியில் ஒரு கேமரா என நான்கு பின்புற கேமராக்கள், தவிர, செல்ஃபி க்ளிக் செய்ய 16 எம்பியில் ஒரு கேமரா என அசத்துகிறது இந்த போன். உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், பாடல்கள், புகைப்படங்கள், வீடியோக் களைத் தாராளமாக சேமித்து வைக்க 256 ஜிபியில் ஸ்டோரேஜ், 189 கிராம் எடை. இந்தப் போன் கடல் நீலம் மற்றும் லூமினஸ் பிளாக்கில் கிடைக்கிறது. விலை ரூ. 36,990.