பிரபஞ்சத்தின் வயது 1140 கோடி வருடங்கள்!



தலைப்பைப் படித்ததும் முதலில் ஆச்சரியமே மேலோங்கும். ஆனால், இது யாருடைய வயது என்று தெரிந்துகொண்டால் நிச்சய மாக ஆச்சர்யபடமாட்டீர்கள். ஆம்; இது பிரபஞ்சத்தின் வயது. நாளுக்கு நாள் இப்பிரபஞ்சம் இளமையாகி வருகிறது என்று வேடிக்கையாக சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். விண்மீன் களின் நகர்வு அடிப்படையில் பிரபஞ்சத்தின் வயதை மதிப்பீடு செய்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

அத்துடன் ஹப்புள் கான்ஸ்டன்ட் என்ற முறையும் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் சில வருடங்களுக்கு முன் ஆய்வு செய்தவர்கள் பிரபஞ்சத்தின் வயதை 13.7 பில்லியன் வருடங்கள் என்று கணித்தனர்.

அதாவது 1370 கோடி வருடங்கள். இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இன்று 11.4 பில்லியன் வருடங்கள் என்று பிரபஞ்சத்தின் வயதை லேட்டஸ்ட் ஹப்புள் கான்ஸ்டன்ட் மூலம் கண்டறிந்துள்ளனர். அப்படியென்றால் முன்பை விட இரண்டு பில்லி யன் வருடங்கள் இளமையானது இந்தப் பிரபஞ்சம்.