மின்சார மீன்



அமேசான் காடு ஒரு பக் கம் எரிந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் நடக்கும் ஆராய்ச்சிகள் குறையவில்லை. அங்கிருக்கும் பல்லுயிர்கள் பற்றிய ஆச்சரியங்கள் அறிவியலுக்கே எட்டாக்கனியாக இருந்துவருகிறது.
அப் படியான ஒரு ஆச்சர்யம் தான் இது. ஆம்; இப்போது இரண்டு வகையிலான விலாங்கு மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒன்று 860 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் திறன் வாய்ந்தது. உலகிலேயே அதிகளவில் மின்சாரத்தை வெளியிடும் உயிரினம் இதுதான்.

இதற்கு முன் 650 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் விலாங்கு மீனை சில வருடங்களுக்கு முன் அடையாளம் கண்டனர். இதன் டி.என்.ஏ. வை ஆராய்ச்சி செய்து சுமார் 70 லட்சம் வருடங்களாக இந்த மீன் பூமியில் வாழ்ந்து வரலாம் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவர் உயிரியல் நிபுணரான சி டேவிட் டே சண்டானா.