புதிய வரவுகள்



உலகைக் குலுக் கிய நிகழ்வு களில் ஒன்று ஐபோன் அறிமுகம். ஜூன் 29, 2007-இல் ஐபோனின் முதல் மாடல் விற்பனைக்கு வந் தது. கடந்த நவம்பர் 1, 2018-ம் ஆண்டு வரைக்கும் 220 கோடி ஐபோன்கள் விற்பனையாகி யிருக்கின்றன.  கிட்னியை விற்று ஐபோன் வாங்கியவர்கள் கூட இருக்கிறார்கள். அந்தளவுக்கு  இளசுகளின் மத்தியில் ஐபோன் மீது பெரிய மோகம்.
இப்போதும் கூட அந்த மோகம்  குறைந்தபாடில்லை. முதன் முதலாக ஐபோன் கடைக்கு வந்தபோது ஆயிரக்கணக்கானவர்கள் தூங்காமல் இரவு முழுவதும் ‘ஆப்பிள்’ ஸ்டோரின் முன் காத்திருந்து ஐபோனை வாங்கிச் சென்றது வரலாறு.  

அந்தளவுக்கு ஐபோன் அந்தஸ் தின் குறியீடாகக் கருதப்பட்டது. இப்போதும் அதே நிலைதான். பிறகு ஒவ்வொரு வருடமும் ஐபோன் தனது புதிய மாடல் களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது. தற்போது புதுப்புது நிறுவனங்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் ஸ்மார்ட் போன்களை அறி முகப்படுத்துகின்றன. அதுவும் குறைவான விலையில். அந்த டெக்னாலஜிகளை எல்லாம் ஐபோன் இப்போது தான் அறிமுகப்படுத்தினாலும் அதன் மீதான மவுசு தீரவில்லை.

கடந்த செப்டம்பர் 10-தேதி  ‘ஆப்பிள்’ நிறுவனம் ஐபோன்11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்ற புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இந்த புது மாடல்கள் செப்டம்பர் இறுதியில்தான் கிடைக்கும். இருந்தாலும் இப்போதே முன்பதிவுகள் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டன. இந்த புது வரவுகளில் என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஐபோன் 11 பார்த்த துமே மனதை சுண்டி தன்வசம் ஈர்க்கிறது இந்த மாடல். 6.1 இன்ச்சில் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே ஒவ்வொரு புகைப்படத்தையும், எழுத்தையும், வீடியோவையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. 828x1792 பிக்ஸல் ரெசல்யூசன், iOS 13 இயங்குதளம், தண்ணீர், தூசு புகாத பாதுகாப்பு, 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி என மூன்று விதமான ஸ்டோரேஜ்கள், 12 எம்பியில் இரண்டு பின்புற கேமராக்கள், ஆட்டோ ஜூம், ப்ளேபேக் ஜூம், 4 k தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் என ஏராளமான நுணுக்கமான வசதிகள் இந்த கேமராவில் உள்ளன.

இதுபோக 12 எம்பியில் செல்ஃபி கேமரா கெத்து காட்டுகிறது. இது முகத்தை அடையாளம் காட்டுவது மற்றும் வீடியோ அழைப்பு களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கபப்டுள்ளது. ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியுள்ளது. 30 நிமிடத்தில் 50 சதவீத பேட்டரி சார்ஜ் ஆகிவிடுகிறது. இரண்டு சிம் கார்டுகளை இதில் பயன்படுத்தலாம்.

கருப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை என ஆறு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.  விலை ரூ.64,900-லிருந்து ஆரம்பிக்கிறது.ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்இந்த இரண்டு மாடல்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 5.8 இன்ச்சில் சூப்பர் ரெட்டினா  XDR டிஸ்பிளேவில் கலக்குகின்றன.

11 ப்ரோ. 6.5 இன்ச் மெகா சைஸில் சூப்பர் ரெட்டினா  XDR டிஸ் பிளேவில் மின்னுகிறது 11 ப்ரோ மேக்ஸ். 64 ஜிபி, 256 ஜிபி, 512ஜிபி என இதுவும் மூன்று விதங்களில் கிடைக்கிறது. 12 எம்பியில் அல்ட்ரா வைடு, வைடு , டெலிபோட்டோ என மூன்று கேமராக்கள், 12 எம்பியில் செல்ஃபி கேமரா என இரண்டு மாடல்களிலும் பெரிய வித்தியாச மில்லை.

இதுவரைக்கும் வெளியான ஐபோன் மாடல்களை விட அதிக நேரம் பேட்டரி நிற்கும் திறன் மற்றும் குறைந்த நேரத்தில் சார்ஜ் ஆகக்கூடிய வசதி மற்றும் இரண்டு சிம் கார்டுகளை இதிலும் பயன்படுத்தலாம்.  கோல்டு, ஸ்பேஸ்க்ரே, சில்வர், மிட்நைட் க்ரீன் என நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன. 11 ப்ரோவின் விலை ரூ.99,900-லிருந்தும், 11 ப்ரோ மேக்ஸின் விலை ரூ.1,09,900 -லிருந்தும் ஆரம்பிக்கிறது.