பில்லியன் டால்ர்



ஜெப் பெஸோஸ்-மெக்கன்சி பெஸோஸ் தம்பதியினரின் விவாகரத்து தான் உலகம் முழுவதும் ஹாட் டாக்.‘அமேசான்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜெப், 1992-இல் அமெரிக்க நாவலாசிரியையான மெக்கன்சியை சந்திக்க, இரு வருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர். 1994-இல் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கி உலகளவில் பெரும் பணக்காரராக உயர்ந்தார் ஜெப்.

நான்கு குழந்தைகளுக்குப் பெற்றோரான இந்தத்  தம்பதியர் 25 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கின்றனர். இந்த விவாகரத்தால் உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையிலிருந்து பின்னுக்குப் போய்விட்டார் ஜெப். ஆம்; 137 பில்லியன் டாலர் நிகர சொத்துக்கு சொந்தக்காரரான ஜெப், 60-70 பில்லியன் டாலரை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுக்கப்போகிறார்.

மெக்கன்சிக்குக் கிடைக்கும் தொகை இந்திய மதிப்பில் சுமார் 4.2 லட்சம் கோடி ரூபாய். ஜெப் தனது நண்பரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தது தான் இந்த விவாகரத்துக்குக் காரணம். உலகின் அதிக விலைஉயர்ந்த விவாகரத்து இதுதான்.