முத்தாரம் Mini



உங்களின் கதைகளுக்கான ஐடியாக்கள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது?

பொதுவாக நான் கதையைப் பற்றி யோசிப்பதே இல்லை. அதுவாகவே என்னிடம் வந்து சேர்கிறது என்று நினைக்கிறேன். நான் ரொம்பவே எளிமையான ஒரு  வாழ்க்கையை வாழ்கி றேன். அதனால் எனக்கு நிறைய நேரம் கிடைக் கிறது. அந்த நேரங்களில் எல்லாம் பகல் கனவு
களில் மூழ்கியிருப்பேன். அந்தக் கனவுகள் வழியாகத்தான் கதைகள் என்னிடம் வருகிறது என்று நினைக்கிறேன்.

கதைகளுக்கான படங்களைத் தேர்வு செய்கிறீர்களா அல்லது  படங்களுக்காக கதையா?

முதலில் நான் தலைப்பைத் தான் தேர்வு செய்கிறேன். அதற்குப் பிறகுதான் கதை. கடைசியில் தான் படங்கள்.

உங்களின் கதைகள் வழியாக குழந்தைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நான் எதையும் சொல் வதில்லை. என் கதையைப் படிக்கும் குழந்தைகள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதில்
மட்டுமே ஆர்வமாக இருக்கிறேன்.

- டாவ் பில்கே,
குழந்தைகள் எழுத்தாளர், அமெரிக்கா.