மீட் Mr.World



தாய்லாந்தில் நடந்த உலக ஆணழகன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் அரசு. ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம் தான் உலகளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தமிழகத்திலிருந்து 14 பேர் போனோம்.
இதுல என்னோட சேர்த்து ஐந்து பேருக்கு பதக்கமும், ஆறு பேருக்கு இடமும் கிடைச்சிருக்கு. அதாவது பதினோரு பேர் டாப் 5ல வந்திருக்கோம். இதுல ஒரு பொண்ணும் உண்டு. தமிழகத்திலிருந்து இவ்வளவு பேர் கலந்துகிட்டு பதக்கமும், இடமும் வாங்கினது இதுவே முதல்முறை...’’ என நெகிழும் அரசுக்கு வயது 48.

‘‘பொதுவா, எல்லா ஆணழகன்களின் நோக்கமும் ஒலிம்பியாவுல தங்கம் வாங்கணும் என்பதாகவே இருக்கும். இதுக்குத் தேர்வாக உலக ஆணழகன் போட்டியில தங்கம் வெல்லணும். இந்த வருஷம் வெண்கலம் அடிச்சிருக்கேன். அடுத்து, இங்கே தங்கத்தை தட்டி ஒலிம்பியாவுல தங்கம் ஜெயிக்கணும். அதுதான் என் லட்சியம். நிச்சயம் வெல்வேன்...’’ நம்பிக்கையாக தம்ப் காட்டுகிறார் அரசு.