ஃபேஸ்புக்கில் ஏன் அதிக நேரத்தை செலவழிக்கிறோம்?



ஏன்? எதற்கு? எப்படி?

இன்றைய இளைஞர்கள் இரவு தூங்கும் முன்பும் காலையில் எழுந்தவுடனும்  கண் விழிப்பது ஃபேஸ்புக்கில்தான். அந்தளவுக்கு ஃபேஸ்புக் நம் நேரத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ‘‘நம்முடைய எழுத்து திறமைகளை வெளிப்படுத்த  பொதுவெளி யாகவும், புதுப்புது நண்பர்களை கண்டடைய ஒரு வழித்தடமாகவும், நண்பர்களுடன் அரட்டை அடிக்க  ஏதுவாகவும், செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஊடகமாகவும் ஃபேஸ்புக் இருப்பதால் அதில் அதிக நேரம் இருக்கிறோம்...’’ என்று ஒரு தரப்பு கூறுகிறது.

‘‘ஃபேஸ்புக் திரையில் நம்மைக் கவர்கின்ற இமேஜ்கள் குவிந்துகிடக்கின்றன. திரையை ஸ்குரோல் செய்யச் செய்ய புதுப்புது இமேஜ்கள் நம் கண் முன்னே தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அது நம்மை வேறு திசையில் நகரவிடாமல் ஆக்கிரமித்துவிடுகிறது. அதனாலேயே நம்மையும் அறியாமல் அதிக நேரம் ஃபேஸ்புக்கில் இருக்கிறோம்...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு.