நியூஸ் ரூம்



*ஜப்பானில் நடந்த மீன் ஏலத்தில் 278 கிலோ எடையுள்ள ‘ப்ளூஃபின்டுனா’ வகையைச் சேர்ந்த மீன் 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. உணவுக்காகப் பயன்படுத்தப்படும் மீன்களில் இதுதான் விலையுயர்ந்தது.
 
*விஷத்தன்மையுள்ள ஜெல்லி மீன்களின் படையெடுப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலான கடற்கரைகளை மூடிவிட்டது ஆஸ்திரேலியா.

*2021-இல் விண்வெளியில் பீன்ஸ் விவசாயம் செய்வது உறுதி என்று நார்வேயின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பலகலைக்கழகம் அறிவித்துள்ளது.

*கடந்த 70 வருடங்ளில் முதல் முறையாக 2018-இல்  சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.