மாத்தி யோசி ஜெயிப்பது ஈஸி!ஸ்டார்ட் அப் மந்திரம் 25

விளம்பரங்களின் மேஜிக் என்ன தெரியுமா? எதேச்சையாக சாலையில் கீழே கிடக்கும் 10 ரூபாயை எடுத்தாலும் அதை எப்படி செலவு செய்வது என உங்களுக்கு வழிகாட்டுவது டிவியில் முந்தையதினம் நீங்கள் பார்த்த விளம்பரங்கள்தான். தேவையோ இல்லையோ, புதிய பொருளை வெறியுடன் வாங்க வைக்கும் உளவியலை விளம்பரங்கள்தான் ஏற்படுத்துகின்றன.

கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீதர் குண்டையா(ஸ்டோர்கிங்) இந்த விஷயத்தில் கெட்டி. கர்நாடகாவின் அஞ்சிபுராவுக்கு ஸ்ரீதர் வரும்போது மக்கள் நகரில் கிடைக்கும் பொருட்கள் குறித்த விளம்பரங்களை ஆர்வமுடன் பார்ப்பதைக் கவனித்தவருக்கு, மூளையில் பல்ப் எரிய உடனே ஸ்டார்ட்அப் முயற்சியைத் தொடங்கினார். அங்குள்ள மளிகைக்கடையில் நகரில் கிடைக்கும் பொருட்களை பெறும்படி டேப்லட்களை அமைத்துக் கொடுத்தார்.   

ஸ்டோர்கிங் என்ற இவரது நிறுவனத்தில் தற்போது 10 மாநிலங்களிலுள்ள 1.5 லட்சம் கிராமங்கள் இணைந்துள்ளன. ஸ்டோர்கிங் வணிகத்தில் தற்போது 50 ஆயிரம் வணிகர்கள் இணைந்துள்ளனர்.
“நாங்கள் அமேஸான் அல்லது ஃபிளிப்கார்ட் போல ஆப் தரவிறக்கி பொருட்களை வாங்க கூறுவதில்லை. ஏனெனில் கிராமத்தினரை அம்முயற்சி குழப்பும்” புன்னகையுடன் பேசுகிறார் ஸ்ரீதர் குண்டையா. ஸ்டோர்கிங்கில் ஆர்டர் செய்தால் பணத்தை கடைக்காரரிடம் கொடுத்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதில் வணிகர் களுக்கு 8-10% கமிஷன் கொடுக்கிறார்கள்.  

ஃபிளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கியதுதான் ஊர் உலகம் தெரிஞ்ச விஷயமாச்சே! அதுபோல பிற கம்பெனிகளின் மதிப்பு, முதலீடு பற்றி தெரிந்துகொள்வது மனதை ரிலாக்ஸ் செய்யும். ( வெட்டிச் செய்தி)  “ இப்படியே படிக்காம ஊரைச்சுத்தி வந்தீன்னா, உருப்படாம போயிருவடா.

கல்யாணப்பத்திரிகையில் போட டிகிரி வேணுங்கிற எண்ணத்திலாவது படி” என அம்மா மூலம் சமூகம் நமது கல்வி ஆர்வத்தை தூண்டுவதும், தேர்வு எழுதி உதவித்தொகை பெறுவதும் கூட வாழ்க்கைக்கு ஊக்கம் தருவதுதான் இல்லையா? இதே கான்செப்டில்தான் ஸ்டார்ட்அப்புக்கு பெரு நிறுவனங்களின் ஆக்சிலரேட்டர் திட்டமும் உதவுகிறது.

முதலீடு எவ்வளவு?

(மில்லியனில்)  
ஃபிளிப்கார்ட் (வால்மார்ட்)  
மதிப்பு- 20,779 (2018)  
வால்மார்ட் முதலீடு - 6,115  
மேக்மைட்ரிப்  
மதிப்பு - 477 (2010)  
முதலீடு - 15   
மிந்த்ரா (ஃபிளிப்கார்ட்)  
மதிப்பு - 343 (2014)  
முதலீடு - 178  
ப்ரீசார்ஜ் (ஸ்நாப்டீல்)  
மதிப்பு - 450 (2015)  
முதலீடு - 202

(உச்சரிப்போம்)

கா.சி.வின்சென்ட்