ரத்தக் கழுகு!வைக்கிங் இனத்தினர் தங்களுடைய எதிரி களைச் சித்திரவதைப்படுத்திய நுட்பமுறைக்கு பிளட் ஈகிள் என்று பெயர். முதுகை வாகாக கத்தியால் அரிந்து மார்பெலும்புகள் சிறகுகளாக விரிய நுரை யீரல், குடல் என வெளியே எடுத்து கொல்லும் அதிபயங்கர சித்திரவதை அமுலில் இருந்த காலம் 867 ஆம் ஆண்டு.  

நார்த்தம்பிரியா(யார்க்‌ஷையர், இங்கிலாந்து) பகுதி மன்னர் ஏல்லா, வைக்கிங் இன மன்னர் ரக்னார் லோத்பிரோக்கை உயிருள்ள பாம்புகளின் வளையில் தூக்கியெறிந்து கொன்றார். பழிக்குப்பழி தீருமா? லோத்பிரோக் மகன் இவார் 865 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஊடுருவித் தாக்கி மன்னர் ஏல்லாவுக்கு ரத்தக்கழுகு தண்டனையைக் கொடுத்தார்.  

கையையும் காலையும் கட்டி முதுகெலும்பு தொடங்கும் இடத்தில் கத்தியால் கீறி தோலை உரித்து அதில் இணைந்துள்ள விலா எலும்புகளை கோடரியால் வெட்டிப் பிரிப்பது முதல் டாஸ்க். இதையும் சகித்து குற்றவாளியின் உயிர் இருக்கிறதா? உடனே நுரையீரல், குடல் ஆகியவற்றை உடலிலிருந்து உருவுவார்கள். இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்சில் புழக்கத்திலிருந்து தண்டனை டெக்னிக் போர்க்கடவுளான ஓடினுக்கான தியாகமாக வைக்கிங் இனத்தினர் கருதினர்.