கனவுகள் தூக்கத்தை குறைக்கிறதா?பாம்பு உங்களை காட்டில் துரத்துவது, ரத்தம் குடிக்கும் காட்டேரிகளிடம் தப்பி ஓடி பள்ளத்தில் வீழ்வது என கனவுகள் கண்டு அலறி எழும்போது குப்பென உடல் வியர்த்து தூக்கம் கலைந்துவிடும்.
பொதுவாக தூங்கி எழுந்து வேண்டாவெறுப்பாக சோம்பல் முறிக்கும்போது பெரும்பாலான கனவுகள் 90 சதவிகிதம் மூளையின் லாக்கர்களிலிருந்து கீழிறங்கிவிடும். அப்படி நினைவிருந்தால் அக்கனவுகள் உங்கள் தூக்கத்தை தீவிரமாக பாதித்துள்ளது என புரிந்துகொள்ளலாம். SWS (Slow Wave Sleep),REM (Rapid Eye Movement) என இருவகை தூக்கம் நமக்கு ஏற்படும்.

விலங்கு துரத்துவது, மிருகம் உங்களின் நெஞ்சில் அமர்ந்திருப்பது ஆகியவற்றைக் கண்டு வியர்த்து எழுந்து மூச்சுவாங்கினால் நீங்கள் SWS நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். REM வகை கனவு நிஜமா, கனவா என ஆச்சரியப்படுத்தும் நுணுக்கங்களைக் கொண்டிருக்கும்.  

மூளையில் பிரயோஜனமில்லாத தகவல்களை வெளியே தள்ளுவதுதான் கனவின் பணி. மூளை தன்னை புதுப்பித்துக்கொள்ள கனவுகள் உதவுகின்றன. எட்டு முதல் பத்து வயதில் தூங்கியதுதான் ஒருவரின் சிறந்த தூக்கம் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்து.