டெக் புதுசு!TouchFocus
படிப்பதற்கும், சாதாரணமாகவும் உதவும் இரு கண்ணாடிகளின் தேவையை 20 டிசைன்களில் ரிலீசாகியுள்ள டச் ஃபோகஸ் கண்ணாடிகள் தீர்க்கின்றன. கண்ணாடி பிரேமிலுள்ள பட்டனை அழுத்தினால் படிக்கும் மோடை மாற்றலாம். யுஎஸ்பி சார்ஜிங் கண்ணாடியின் விலை ரூ.1,60,798
 
Beyerdynamic Aventho Wireless On-Ear Headphones
துல்லியமான ஒலி, டிசைன் கண்ட்ரோல் என அசத்தும் அவென்தோ வயர்லெஸ் ஹெட்போன்கள், கண்ணாடி அணிபவர்களுக்கு உறுத்தலான ஹெட்போன். இதிலுள்ள அம்சங்களுக்கு விலையும் சற்று அதிகம்தான். ஜெர்மனி தயாரிப்பு ஹெட்போனின் ஆப் பத்து மீட்டரைத் தாண்டினால் தொடர்பிழந்து திணறுகிறது. ரூ.25,543
 
Amazon’s  Waterproof Kindle Paperwhite  
32 ஜிபி வரை நினைவகத்தை அதிகரிக்க முடியும் அமேஸானின் கிண்டில் நூல்களை ஸ்க்ரீனில் எவ்வளவு கறைகள், தூசி இருந்தாலும் படிக்கலாம். இ-புத்தகங்கள், ஒலிபுத்தகங்கள் என சேமிக்க முடியும்.
 
Audioengine HD3  
சிறந்த கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்கள் தேவை என்றால் ஆடியோஎஞ்சின் உதவும். ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்பீக்கர்களை இணைத்தால் இசை பிரளயம் இனிதே தொடங்கும். ரூ.25,543