Mini முத்தாரம்



சந்திரசேகர் ஆசாத், ராவண் என இரண்டு பெயர்களில் உங்களை அழைக்கிறார்களே?  

அரசு ஆவணங்களின்படி என் பெயர் சந்திரசேகர் ஆசாத். ஊடகங்கள் என்னை வில்லனாகக் காட்ட ராவணன் என அழைக்கின்றன. பாஜக உறுப்பினர்கள் ராவணன் கொல்லப் படுவான் என்று பகிரங்க கொலைமிரட்டல்களை விடுக்கின்றனர். வழக்குரைஞர், பீம் ஆர்மி அமைப்பை நடத்தும் எளிய மனிதன் என்பதே உண்மை.
 
பீம் ஆர்மி பிறந்தது எப்படி?  

கன்ஷிராம் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு எங்கள் இனத்தைக் காக்க பீம் ஆர்மியை உருவாக்கினோம். உள்ளூர் பள்ளியில் ஆதிதிராவிட மாணவர்கள் சிக்கல்களைச் சந்திக்க அவர் களுக்காக இதனை உருவாக்கும் தேவை  ஏற்பட்டது. இது இதனை பாரத் இக்தா மிஷன் என முன்னர் அழைக்கப்பட்டது. ஆதிதிரா விடர்களுக்கு எதிரான அநீதியை தடுக்க பல்வேறு மாநிலங்களுக்கு பயணிக்கவிருக்கிறேன்.
 
இட ஒதுக்கீடு ஆதிதிராவிடர் களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு பயனளித்துள்ளது என்கிறார்களே?  

இடஒதுக்கீடு பற்றிய அறியாமைப் பேச்சு அது. சமநிலை  இல்லாத சமூகத்தில் நலிவடைந்த சமூகமான எஸ்சிக் களுக்கு இட ஒதுக்கீட்டை அரசி யலமைப்பு உறுதி செய்துள்ளது. இப்படி பாகுபாடு காட்டும் தேசம் எப்படி வளரமுடியும்?

-சந்திரசேகர் ஆஸாத், பீம் ஆர்மி இயக்கத் தலைவர்.