நாட்டை பாதுகாக்கும் வங்கியாளர்!இங்கிலாந்து துணை கவர்னராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சர் பால் டக்கர், ஹார்வர்டிலுள்ள ஆபீசில் தங்கி வங்கி குறித்த 568 பக்கங்கள் கொண்ட Unelected Power: The Quest for Legitimacy in Central Banking and the Regulatory State நூலை எழுதியுள்ளார். “அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் தம் வீடுகளை இழக்க, மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். நம்மை ஆள்வது யார்? என்ற கேள்வியை அவர்கள் ஏன் எழுப்பவில்லை” என நேரடி யாகப் பேசுகிறார் டக்கர்.  

லண்டனின் வடமேற்குப்பகுதியான காட்சயைச் சேர்ந்த டக்கர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டதாரி. ஜனநாயகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்,  பணவீக்கத்தை கட்டுப் படுத்த வரிவிகிதங்களை அறிவிப்பதோடு வங்கிகளின் நடைமுறைகளைக் கட்டுப் படுத்தும் பொறுப்பும் முக்கியமானது என கருதுகிறார்.

 “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்ட வங்கிகளை நிர்வகிக்க தனி கமிட்டி தேவையில்லை. சரியான தலைவர் கிடைத்தாலே போதும்” என தற்போதைய நிலையை விமர்சிக்கிறார். இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை சமாளித்த அனுபவஸ்தர் என்ற நிலையில் பால் டக்கரின் அறிவுறுத்தல்கள் முக்கியமாகின்றன.