ஆணழகு தமிழர்!அண்மையில் மகாராஷ்டிராவில் புனேயில் நடைபெற்ற 52 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் சென்னைத்தமிழர் தேசிய சாதனை புரிந்துள்ளார்.  தமிழ்நாட்டில் சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த பாடிபில்டரான அரசு, ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்று கடுமையான போட்டிகளைச் சமாளித்து வெண்கலப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
 
ஆண்டுதோறும்  நடைபெற்று வரும் புகழ்பெற்ற ஆசிய ஆண ழகர்களுக்கான போட்டியில், எண்பது கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச்  சேர்ந்த  உமுர்  சாகாவ் முதல் பரிசை வென்றார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த விராஜ் சர்மால்கர் இரண்டாமிடத்தையும், சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த அரசு மூன்றா மிடத்தையும் பிடித்தனர். இவர் சர்வதேச ஆணழகன் போட்டியிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.