சிவப்பு சக்தி!



உகாண்டா அதிபர் யோவெரி முசேவனி தன் என்ஆர்எம் கட்சி கட்டிடத்தில் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் இருந்தபோது, 300 கி.மீ அப்பால் இசைக்கலைஞர் ராபர்ட் கியாகுலான்யி (எ) பாபி வைன், “முசேவனி உள்ளிட்ட ஊழல் தலைவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிக்கவேண்டும். மக்கள் அதிகாரம்- நமது அதிகாரம் (பாப் வைனின் கட்சிப் பெயர்)” என்று  கோஷம் எழுப்ப, கூடியிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரின் முழக்கத்தை வழிமொழிந்தனர்.  

ஏறத்தாழ உகாண்டாவை 32 ஆண்டுகளாக ஆளும் முசேவனி, தனக்கு எதிரான கட்சிகளை முடக்கி உலக நிதி யகத்துடன் நல்ல உறவைப் பேணி வருகிறார். ஆப்பிரிக்காவின் ரோல்மாடல் தலைவர் என்று உலகநிதியகமே சான்றிதழ்தருமளவு.  எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் (FDC) செயலிழந்து நிற்கிறது.

பாப்வைனின் இயக்கம் இசை, வீடியோ, சிவப்பு-கருப்பு நிற உடை என களமிறங்கியுள்ளது இளைஞர்களை ஈர்த்துவருகிறது. உள்ளூர்தேர்தலில் 24 ஆயிரத்து 500 சீட்டுகளை வென்ற இளைஞர்களில் பெரும்பாலானோர் பாப்வைன் இயக்க உறுப்பினர்கள். 2021 தேர்தலைக் குறிவைத்து இயங்கிய பாப்பை, முசேவனி அரசு தேசத்துரோக குற்றம் சாட்டி கைது செய்து அண்மையில் விடுதலை செய்துள்ளது.