ஸ்மார்ட் VR கேம்ஸ்!INCELL  

மனித உடல்தான் விளையாட்டின் மையம். அதில் நடைபெறும் ஆக்‌ஷன், சேசிங்குகள் விஆர் ஹெட்செட் தாண்டியும் ரசிக்க வைக்கிறது.

WAA!  
விண்கலத்திலுள்ள நீங்கள் எதிரே உங்கள் மீது மோதவரும் விண்கற்களை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிப்பதே சுவாரசிய விளையாட்டு.

SWIVEL GUN! LOG RIDE  
ரோலர்கோஸ்டர் விளையாட்டுதான். உங்கள் முன் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கியை இயக்கி கண்ணில் தெரியும்  பீப்பாய்களை சுட்டு வீழ்த்தவேண்டும் என்பதே டாஸ்க்.

GALAXY  
விண்வெளியில் எதிரிகளை நாட்டுப்பற்றுடன் போட்டுத் தாக்கும் விளையாட்டு.

SISTERS  
வெளியே புயல், உள்ளே பேய். எப்படி சமாளித்து உயிர் பிழைக்கிறீர்கள் என்பதே இந்த ஆவி கேமின் தீம்.

11:57  
முழுக்க இரவில் விளையாட வேண்டிய அமானுஷ்ய விளையாட்டு. ஒளியும் ஒலியும் அசத்தல்.

STITCHERS VR  
டிவி தொடரான ஸ்டிச்சர்ஸைத் தழுவியது. கொலையாளியை க்ளூக்களை வைத்து நீங்களே கண்டுபிடிக்கவேண்டும் என்பதுதான் கேமின் சுவாரசியம்.