சீனாவின் புதிய கிரிப்டோகரன்சி!



சீனா சென்ட்ரல் வங்கி, விரைவில் கிரிப்டோகரன்சியை தங்கள் நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. எப்போதும்போல அவர்களுக்கேற்றபடி கஸ்டமைஸ் செய்துதான் கரன்சி ரிலீசாகிறது என்றாலும் அரசின் அங்கீகாரம் முக்கியமானது. யுவான் புழக்கத்தில் இருக்கும்போது  கிரிப்டோகரன்சியையும் வணிகத்தில் பயன்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.  

பல நாடுகளும் யோசிக்கும்போது சீனா  எப்படி   துணிச்சலாக கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இறங்குகிறது? கிரிப்டோகரன்சியில் வணிக  பரிமாற்ற செலவு குறைவு. வங்கியோடு தொடர்பு கொள்ள முடியாத  மக்களும்  இதனை எளிதாக பயன்படுத்தலாம். பொருளாதார வளர்ச்சிக்கு உலகளவில் எளிதாக பயன்படுத்தும்  ஓர்  கரன்சி  தேவை என்பதால், கிரிப்டோகரன்சியை தன் கையில் ஏந்தியுள்ளது சீனா.  உலகில்  பல  நாடுகளும் பிட்காயின் உள்ளிட்ட  கிரிப்டோகரன்சியை வணிகத்தில் பயன்படுத்த யோசித்து வருகின்றன.

ஜப்பானில் பிட்காயின்களை சட்டபூர்வமாக 2 லட்சத்து 60 ஆயிரம்  கடைகள் அங்கீகரித்துள்ளன என்பது சின்ன சாம்பிள். அகதிகளுக்கான நிதியுதவியை கிரிப்டோகரன்சி வழியாக வழங்க ஐ.நா சபை சோதனைமுயற்சிகளை செய்து வருவது கிரிப்டோகரன்சியின் எதிர்காலத்தை உங்களுக்கு விளக்கும்.