புத்தகம் புதுசு!



BRAIN FITNESS

The Easy Way of Keeping Your Mind Sharp Through Qigong
by Aihan Kuhn
P.192 Rs.1097
YMAA   
மூளை, மனம், ஆன்மா என மூன்றுக்குமான பயிற்சிகளைக் கொண்ட நூலிது. கிழக்கு மரபில் மேற்குலக மருந்துகளைப் பயன்படுத்துவதுதான் இந்த நூலின் டெக்னிக். Taiji, Qigong என இரு முறைகளின் மூலம் உடலின் முதிர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்தி மூளை, மனதின் ஆற்றலை மேம்படுத்துவதைப்பற்றி விவரிக்கிறது. டாய்ஜி, க்யூகாங் எனும் இரு முறைகளைப் பற்றி ஆதி முதல் அந்தமாய் படங்களோடு விவரிக்கும் இந்நூல், உடலுக்கும் மனதுக்குமான ஆற்றல் கையேடு.

GASTROPHYSICS

The New Science of Eating
by Charles Spence
P.336  Rs.1,279
Viking
உணவுக்கும் உடலுக்குமுள்ள தொடர்பைப் பற்றி நீங்கள்  துல்லியமாக அறிய வாசிக்க வேண்டிய நூலிது. உணவகத்தின் சூழலுக்கும் அங்கு பரிமாறப்படும் உணவுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆழமாக பல்வேறு எடுத்துக்காட்டு களுடன் விளக்குவது அழகு. அறிவியல்  மற்றும் கலாசாரத்தை மிக்ஸ் செய்து உளவியல் சுவையுடன் படைத்துள்ள இந்நூலில் உணவை எப்படி கிளாமராக தயாரிக்கிறார்கள், எப்படி உணவகங்களின் சூழலை டிசைன் செய்கிறார்கள் என்பதுவரை டீடெய்ல்கள் பக்கா. உணவு விரும்பிகள் மற்றும் செஃப்களுக்கான அழகிய கையேடு இந்நூல்.