இனி நினைவுகளை எடிட் செய்ய முடியும்!



நம் மூளையிலுள்ள மோசமான நினைவுகளை அகற்றினால் நம் சோகம் குறையும் என நம்புகிறீர்களா? PTSD  எனும் மன அழுத்தம் குறைக்கச்செய்யும் புதிய மருத்துவ சிகிச்சையை தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் மெக்கில் பல்கலைக்கழகம்  இணைந்து அப்லைசியா எனும் கடல் நத்தையின்  நியூரானை ஆராய்ந்தபோது, பதட்டம் ஏற்படுத்தும் நினைவுகளை எளிதாக அழிக்கலாம் என கண்டறிந்துள்ளனர். ஒரு நாய் குரைப்பது, சூடான பொருளைத் தொடுவது, வன்முறை ஆகிய சம்பவங்களை நரம்பணுக்கள் தாமாகவே ரெக்கார்ட் செய்கின்றன. 

“நீங்கள் க்ரைம் சம்பவங்கள் நிகழும் ஏரியாவில் நடந்து செல்கிறீர்கள் என்றால் அங்குள்ள தபால் பெட்டியைப் பார்க்கும்போது உங்களுடைய உறவினர்களுக்கு அச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கும் எண்ணம் சடாரென தோன்றும்.

எதிர்காலத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, பாதிப்பை தவிர்க்கும் முடிவுகளை எடுக்கவைக்கும் நினைவுகளைத் தவிர பிறவற்றை நம் மூளையிலிருந்து நீக்கவிட முடியும்” என்கிறார் ஆராய்ச்சியாளரான சாமுவேல் சாச்சார். இது நத்தைக்கு ஓகே. மனிதர்களுக்கு? மூளையின் சம்பவம் குறித்த நிகழ்ச்சிகளுக்கும், பிற நினைவுகளுக்குமான  தொடர்பு குறித்து இன்னும் ஆராய்ச்சி யாளர்கள் தெளிவாகவில்லை.