கேட்ஜெட்ஸ் புதுசு!




மொமென்டோ மோரி ஹெட்போன்

ஆம்ப்ளிஃபையர் இசை என்பது அள்ளிப்பருகவேண்டிய அமுதம் என்பதை உணர்ந்த டிசைனர் கோஸ்டாஸ் மெடாக்ஸஸ் மூலம் செதுக்கப்பட்ட துல்லியமான இசையை அள்ளித்தரும் ஹெட்போன் இது. கட்டிங் எட்ஜ் முறையில் இசையைத் தருவதில் குறைபாடு இல்லையெனினும் மினிமமான வால்யூம் பட்டன்கள் முதலில் பழகுவது சிரமம். மண்டையோட்டு வடிவில் ஆம்ப்ளிபையர் புதுவிதமாக இருந்தாலும் தரத்தில் தங்கம். விலை ரூ. 5,03,856.

வீட்டுக்கு பாதுகாப்பு தரும் பிளிங்

வீட்டில் அனுமதியின்றி யாரேனும்  நுழைந்தால் அவர்களைப் பற்றிய வீடியோவினை உடனே உங்கள் போனுக்கு அப்டேட்டாக அனுப்பி எச்சரிக்கை செய்யும் ஒரு செக்யூரிட்டி கார்டுதான் பிளிங். வலுவான AA பேட்டரி இருப்பதால் அடிக்கடி சார்ஜ் தேவையில்லை. பாதுகாப்பு தொடர்பான டாஸ்க்குகளை இதில் செட் செய்து குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு ஜாலியாக  ஹாலிடே கொண்டாடக்கூட உங்கள் மனைவியுடன் செல்ல முடியும். விலை ரூ.10,916

சோஷியல் மீடியா கேமரா

டெடு ட்வின்  360  டிகிரி  கேமரா முழுக்க முழுக்க சோஷியல் மீடியாவுக்கென தன் ஆன்மாவை அர்ப்பணித்தவர்களுக்கானது. லைட்வெயிட் கேமராவான இதில், 2 ஆப்டிக்கல் Fisheye லென்ஸ்கள் மூலம் எக்கச்சக்க படங்களையும் சுட்டுத்தள்ளி  உடனே சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்து மாஸ் புகழ் பெறலாம். விலை ரூ. 19,230 

சயின்ஸ் கிட்

இது விரைவில் வரவிருக்கும் எலக்ட்ரோ கரன்சிதான். தற்போது முன்னதாகவே இணையத்தில் ரிலீசாகியிருக்கிறது. எல்இடி லைட்டுகள், பஸ்ஸர்கள், அட்டகாசமான வடிவமைப்பில் அறிவியல் விளையாட்டு என அசத்துகிறது. கிட்டிலுள்ள பொருட்களை இணையத்திலுள்ள  வழிகாட்டுதல்படி  ஜாலியாக மாற்றி விளையாட முடிவது சூப்பர்தானே! விலை ரூ. 1,930

பா.ஜோஸபின்