நம்பினால் நம்புங்கள்



ஒரு டால்பினுக்கு உடல்நிலை சரியில்லா விட்டால், மற்ற டால்பின்கள் அதை மேலே தள்ளி, கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து, எளிதாகச் சுவாசிக்க உதவி செய்யும்.

டால்பின் தினம் 8 மணி நேரம் வரை உறங்கும். ஆனாலும், அதன் மூளையில் பாதி மட்டுமே ஒரு நேரத்தில் உறங்கும். அதனால் டால்பின் ஒருபோதும் நினைவிழப்பதில்லை!

மனிதர்களுக்கும் டால்பின்களுக்கும் தகவல்தொடர்பு ஏற்படுத்த, இப்போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பொருள், ஐபேட்!

சில வகை டால்பின்கள் தேங்காய்களை பந்து போல கேட்ச் பிடித்து விளையாடும்.

தண்ணீருக்கு அடியில் எளிதாகச் சென்று இரை தேட, டால்பின்களுக்கு ஸ்பெஷலான சூப்பர் சக்தி உண்டு. எகோலொகேஷன் என்ற சோனார் வகையை இதற்காக அவை பயன்படுத்துகின்றன.

டால்பின்களுக்கு வாழ்நாள் முழுக்கவே ஒரு செட் பற்கள் மட்டுமே முளைக்கும்.

முதன்முதலாக ஒரு பிங்க் வண்ண பாட்டில்நோஸ் டால்பின் அமெரிக்காவிலுள்ள லூசியானா ஏரியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ரிஸ்ஸோ டால்பின்களால் 30 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருக்க முடியும்.

‘கில்லர் வேல்ஸ்’ என்று அழைக்கப்படுபவை, கொலைகாரத் திமிங்கலங்கள் அல்ல... உண்மையில் அவை ஒருவகை டால்பின்களே!

ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்து அடையாளம் காணும் வகையில், பிரத்யேக விசில் சத்தம் உண்டு.