தெரியுமா?




பூமாலை நாடுகள்


இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளும் பூமாலை நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளை உலக வரை படத்தில் பார்க்கும்போது, ஒரு பூமாலையைக் கோர்த்தது போல் இருக்கும். இதனால் இச்சிறப்புப் பெயர்.

முதல் ஐஸ்க்ரீம்

நாம் தற்போது சாப்பிடும் ஐஸ்க்ரீமை முதன்முத லில் கண்டுபிடித்து தயாரித்தவர் இங்கிலாந்து நாட்டின் முதலாம் சார்லஸ் மன்னரின் சமையல்காரர் வில்லியம் ஹக்ஸ்லி ஆவார்.

புன்னகை

பொன்னகையை விட மனிதரின் புன்னகை போற்றிச் சொல்லப்படுகிறது. தாய்லாந்து நாட்டிற்கு ‘புன்னகை நாடு’ என்று சிறப்புப் பெயர் உள்ளது. கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செம்பருத்திப் பூ வகைக்கு ‘புன்னகை’ என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

முதல் பென்சில்

பழங்காலத்தில் ரோமானியர்கள் சிறு குச்சிகளை ‘பிரஷ்’ போல் செய்து இலைகளின் சாற்றில் தோய்த்து எழுதினார்கள். இதற்கு ‘பென்சிலஸ்’ என்று பெயர். லத்தீன் மொழியில் ‘பென்சிலஸ்’ என்பதற்கு ‘சிறு வால்’ என்று பொருள். பென்சிலஸ் என்ற சொல்லில் இருந்துதான் ஆங்கிலத்தில் ‘பென்சில்’ என்ற பெயர் வந்தது.

வைர சுத்தி

பழங்காலத்தில் தினம் நீராடலை ‘தேக சுத்தி’ என்று சொல்லி வந்தனர். அதுபோல வைரத்தை சுத்தம் செய்வதை ‘வைர சுத்தி’ என்று சொன்னார்கள். வைரத்தை குதிரையின் சிறுநீரில் மூன்று நாட்கள் ஊற வைத்து எடுத்து நன்கு வெயிலில் காயவைத்து எடுத்தால் வைரம் நன்கு சுத்தமாகும் என்று அந்தக் காலத்தில் நம்பினார்கள்.

அழியாத தேன்


கலப்படமில்லாத சுத்தமான தேன் 2000 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட எகிப்திய மம்மிகளின் சமாதிகளில் வைக்கப்பட்டிருந்த தேன் கெட்டுப் போகாமல் இருக்கிறது என்பதை ஆதாரமாகச் சொல்கிறார்கள் தேனின் பெருமை பேசுகிறவர்கள்.

தர்ப்பூசணிப் பழம்

தர்ப்பூசணிப் பழத்தில் மிகவும் சிவப்பான தசைப் பகுதியில் கோபென் கணிசமாக உள்ளது. இது உடல் பருமனைக் குறைப்பதுடன், புற்றுநோய் வராமல்   தடுக்கும் தன்மையுமுடையது.

உ.ராமநாதன், நாகர்கோவில்.