மனிதக் கடவுள்!



மெக்சிகோ நாட்டில் இருக்கும் ‘பொறுமைக் கடவுள்’ எனப் பெயர் பெற்ற, 300 ஆண்டுகள் பழமையான இயேசு பிரான் சிற்பத்தின் எக்ஸ்ரே படம் இது. ஜும்பாங்கோ நகரில் இருக்கும் சான் பர்த்தலோ ஆலயத்தில் இந்தச் சிலை இருக்கிறது.

பொதுவாக இப்படிப்பட்ட சிலைகளை உருவாக்கும்போது, பிராணிகளின் பற்களையும் நகங்களையும் சிலையில் அச்சு அசலாகப் பொருத்துவார்கள். அப்படித்தான் இந்த சிலையையும் நினைத்தார்கள்.

ஆனால் இந்த சிலையை சீரமைப்பதற்காக எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த நிபுணர்கள் அதிர்ந்து விட்டார்கள். இந்த இயேசு சிலையில் மனிதப் பற்கள் பொருத்தப்பட்டிருந்தன. கோயில் உருவான நேரத்தில் இங்கிருந்த மத போதகர்கள் யாராவது இவற்றை தானம் செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த ஸ்பெஷாலிட்டியாலோ என்னவோ, இது புகழ்பெற்ற தேவாலயம் ஆகி விட்டது.