டியர் டாக்டர்



‘கையால் சாப்பிடும்போதுதான் சாப்பிட்ட மனநிறைவு கிடைக்கிறது... ஸ்பூனால் சாப்பிடும் போது நிறைவு கிடைப்பதில்லை’ என்பது எவ்வளவு உண்மை! சாப்பிடும் முறை பற்றிய தகவல்களை கூறியிருப்பது இன்றைய தலைமுறையினருக்கு நல்ல அறிவுறுத்தல்!- எல்.ஜானகி, மணப்பாறை.

விஞ்ஞான உலகில் ஹாஸ்பிட்டல் 2120... ஆச்சரியங்கள்! கூடவே ‘இப்படியுமா’ என்ற பயமும் தோன்றியது. ரோபோவிடம் மனிதநேயம், அன்பு, பாசம், அரவணைப்பு காண முடியுமா?
 - சுகந்தி நாராயண், வியாசர்பாடி மற்றும் கே. லலிதா, திருக்கழுக்குன்றம்.

டாக்டர் கு.கணேசனின் மருத்துவ ஆலோசனைகள் தொடர்ந்து  மிரட்டிக்  கொண்டிருக்கும்  மழையின் தாக்கத்திலிருந்து  காப்பாற்றிக் கொள்ள வழிகாட்டியிருந்தது. வருங்காலத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் உதவி புரிவதாக இருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கோபம், துயரம், கவலை, மனஅழுத்தம், பயம், அன்பு, சிரிப்பு... இவை ஏற்படும் போதெல்லாம் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன என்ற விவரம் பயனுடையதாக இருந்தது.`கூந்தல்’ பகுதியில் நிபுணர் விளக்கம் கண்டு வியந்தே போனேன்.  கூந்தல் குறித்த அறிவுரைகளை இனி அப்படியே பின்பற்றுவேன். நல்ல செய்திகளை வழங்கும் குங்குமம் டாக்டர் இதழுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
- இல.வள்ளிமயில், திருநகர், மதுரை.

உண்பதிலும் இத்தனை கோளாறுகளா என்று எண்ணத் தோன்றியது. குழந்தைகளின் உண்ணும் பழக்கத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் எடுத்துக் கூறியது ‘மனசே... மனசே...’ பகுதி.
- நா.முத்தரசி, வள்ளியூர்.

‘இஷ்டம் போல எடை’ குறைக்கும் இன்றைய இளசுகளுக்கு எச்சரிக்கையாக இருந்தது கவர் ஸ்டோரி. கூடவே செயற்கையாக எடை குறைப்பதால் கல்லீரல், கணையம், வயிறு, மூளை என அனைத்து உறுப்புகளுமே பாதிக்கும் என்ற தகவல்களும் பயனுள்ளவை.
- மணிமாலா, சென்னை- 11., சி. சந்தியா-கோவை மற்றும்
ஆர்.கிஷோர், கோவை (மின்னஞ்சலில்...).

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள காரணங்களை டாக்டர் சங்கர் கூறியிருப்பது, வளர்ச்சிக் குறைபாடுகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது
என்பதையும் உணர்த்தியது.
- கே.அபிதா, திருப்பூர்.

சித்த மருத்துவர் இந்திராணி வெந்நீரின் மகிமையை அற்புதமாக விளக்கியிருந்தார். கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டிய பயனுள்ள தகவல்கள்.
- ரா.காந்திமதி, தேனி.